விழுப்புரம் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் அரசு
பேருந்தை சிறையிடித்தனர். பேருந்து விழுப்புரத்திற்கே திருப்பி
அனுப்பப்பட்டும், பொதுமக்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய விழுப்புரம் தாலுகா போலீசார்
சாலைகளை உடனே சீரமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த கண்டம்பாக்கம் கிராம மக்கள் கலைந்து
சென்றனர்.
இந்த கண்டம்பாக்கம் கிராமம் விழுப்புரத்திலிருந்து 7 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தை அடுத்த மரகதபுரத்திற்கு அருகே தென்பெண்ணை
ஆறு உள்ளது. அங்கிருந்து லாரிகள் மூலம் தினமும் மணல் அள்ளப்படுகிறது.
நூற்றுக்கணக்கான லாரிகள் தினமும் சென்று வருவதால்
கண்டம்பாக்கத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலைகள் குண்டும்
குழியுமாக மாறியுள்ளன. தற்போது பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர்
தேங்கியுள்ளது.